• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொள்கை அவிருத்தி அலுவலகமொன்றைத் தாபித்தல்
- பொருளாதார அபிவிருத்தியின் அடுத்தகட்டத்தை அடையும் பொருட்டு இலங்கை பொருளாதாரமானது மீளமைக்க வேண்டியுள்ளதோடு, அதற்காக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவன கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் பலப்படுத்துவதும் அத்தியாவசியமானதாகும். கொள்கைத்திட்டமிடல், மீளாய்வு, ஒருங்கிணைப்பு உட்பட நடைமுறைப்படுத்தல் சம்பந்தமாக அமைச்சரவைக்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் கொள்கை அபிவிருத்தி அலுவலகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.