• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மைக்கு கட்டடமொன்றை நிருமாணித்தல்
- விளையாட்டுகளில் ஈடுபடும் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றும் அத்துடன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோக்கில் 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுகளில் ஈடுபடும் ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான சமவாய சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவராண்மை தாபிக்கப்பட்டுள்ளது. 237 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் சுகததாச விளையாட்டுத்தொகுதி மனையிடத்தில் இந்த நிறுவனத்திற்கான தலைமையகக் கட்டடத்தை நிருமாணிப்பதற்கும் இதற்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .