• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பினை தெரிவித்தல் தொடர்பிலான BIMSTEC சமவாயம்
- இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலே தாய்லாந்து பாங்கொக் நகரத்தில் நடாத்தப்பட்ட பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் உறுப்புரிமை கொண்டுள்ள BIMATEC (Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Cooperation) அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் எல்லைதாண்டிய குற்றங்கள் தொடர்புற்ற கூட்டு செயற்குழுவின் 7 ஆவது கூட்டத்தில் உறுப்பு நாடுகளினால் குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு பற்றிய சமவாயத்தை ஏற்பதற்கு ஆவனசெய்யப்பட்டுள்ளது.

எல்லைதாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது பரஸ்பர சர்வதேச சட்ட ஒத்துழைப்பு மிக முக்கிய அங்கமொன்றாக மாறியுள்ள தோடு, குற்றவியல் விடயங்களுக்குரியதாக செய்யப்படும் விசாரணைகளுக்கும் அவற்றை தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இலங்கை யின் ஒத்துழைப்பினை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கும் இலங்கையினால் இந்த நாடுகளிடமிருந்து அத்தகைய ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கும் தேவை யான ஏற்பாடுகள் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பினை தெரிவிக்கும் சட்டத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு பற்றிய BIMATEC சமவாயத்தில் கைச்சாத்திடுவதற்கும் அதனை செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.