• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கதுறையின் தகவல் தொழினுட்ப, தொடர்பாடல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- இலங்கை அரசாங்கத்தினால் அரசாங்க நிறுவனங்களுக்கு தகவல் தொழினுட்ப, தொடர்பாடல் தொழினுட்பத்தை அறிமுகப்படுத்தி முன்மாதிரியான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்க அமைப்புகளுள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் பற்றி அறியச் செய்விப்பதற்கும் தொழினுட்ப உபகரணங்கள் மற்றும் தீர்வுகள் பயன்படுத்தலை அதிகரிப்பதற்கும் ஏதுவாய் அமைந்துள்ளன. ஆயினும், பெரும்பாலன அமைச்சுக்கள், அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைமுறையிலுள்ள இணையத்தள இணைப்புகள் மிக குறைவான வேகத்தில் செயற்படுவதால் ஆவணங்களை பரிமாறிக் கொள்ளும் போதும் அங்கீகரிக்கும் செயற்பாட்டின் போதும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயலாற்றவும் முடியாமற்போயுள்ளது. வலையமைப்பு இணைப்புகள் நிலையாக இல்லாமை காரணமாக அரசாங்கத்தின் பெரும்பாலன உத்தியோகத்தர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக செய்திகளை அனுபுவதும் கூட கடினமான செயற்பாடாக மாறியுள்ளது. அதேபோன்று தகவல் தொழினுட்ப தொடர்பாடல் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் போது அரசாங்க நிறுவனங்கள் யாவும் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையானது தகவல் தொழினுட்ப முறைமை, இணைப்புகள் மற்றும் தரவு தொடர்பாடல்கள் போன்றவற்றை பாதுகாப்பதற்கு சேவை வழங்கும் முறையான அரச கணனி உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமையாகும். ஆயினும், அரசாங்க வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் இத்தகைய தகவல் தொழினுட்ப இணைப்புகளைப் பேணுவதற்காக பெருமளவு செலவு செய்யப்படுகின்றது. அரசாங்கத்தின் நிதியை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வழிமுறையொன்றை நிறுவுவது நிதி அமைச்சின் அடிப்படை நோக்கமாகும் என்பதோடு, இந்த நோக்கம் தகவல் தொழினுட்ப தீர்வுகளை நடைமுறைப் படுத்துவதிலும் தொடர்புறும். இதற்காக அரசாங்க நிறுவனங்களுக்கு உரிய கணனி உட்கட்டமைப்பு வசதிகள் வழங்குவது மிக முக்கியமானதென்பதோடு, இதற்கமைவாக, இந்த துறையின் முக்கிய நிறுவனமான இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனத்தினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள LGN வலையமைப்பை விருத்தி செய்து அரசாங்க நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறமை மிக்க ஒத்துழைப்பினை உருவாக்குவதற்காக அதிவேக இணையத்தள இணைப்புகள், பாதுகாப்பான தொடர்பாடல்களுக்காக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.