• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவை உபகுழுவும் வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவும்
- நாட்டின் மொத்த பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான பிரேரிப்புகள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உரிய அமைச்சர்களைக் கொண்ட பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவை உபகுழுவும் நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையின்பால் பாதிப்பினை ஏற்படுத்தும் விடயங்கள் சம்பந்தமாக அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் உரிய அமைச்சர்களைக் கொண்ட வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்படுவதற்கான பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.