• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 உலக வசிப்பிட தினக் கொண்டாட்டம் சார்பில் 25,000 வீடுகளை பழுதுபார்க்கும் திட்டம்
- ஐக்கிய நாடுகள் அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் ஒக்ரோபர் மாதத்தில் வரும் முதலாவது திங்கட்கிழமையை "உலக வசிப்பிடத்தினமாக" பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக, இம்முறை உலக வசிப்பிடத்தினமானது ஒக்ரோபர் மாதம் 05 ஆம் திகதி திங்கட்கிழமையன்று நடாத்தப்படுவதோடு, அதன் தொனிப்பொருளானது "சகலருக்கும் பொதுவான இடவசதி" என்பதாகும்.

நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடமைப்பு நிருமாணிப்பு செயற்பாட்டில் வீடொன்றின் ஆரம்ப நிருமாணிப்பு வேலைகளை மாத்திரம் புரிந்து சுவர்களின் சீமெந்து பூச்சு இன்றி உரிய வீடுகளில் நீண்டகாலமாக குடியிருக்கும் பலகுடும்பங்கள் இருக்கின்றமை பற்றியும் இதன் காரணமாக வீ்ட்டின் பொருளாதார பெறுமதி குறைவடைதல், வெயில் மழைபோன்ற இயற்கை காரணங்களினால் வீட்டின் அமைப்புக்கு ஏற்படும் பாரிய பாதிப்புகள், வீட்டில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் அடங்கலாக குடியிருப்பவர்களின் சுவாச பிரச்சினைகள் போன்ற இடர்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளமை பற்றியும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உலக வசதிப்பிடத் தின கொண்டாட்டத்திற்கு ஒருங்கிணைவாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் துணை நிறுவனங்கள், ஏனைய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் உதவியுடன் 25,000 வீடுகளின் சுவர்களை சீமெந்து பூச்சு பூசும் நிகழ்ச்சித்திட்டம் அடங்கலாக நாடு தழுவிய ரீதியில் நிகழ்ச்சித்திட்ங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு, ஒக்ரோபர் 05 - 12 வரையிலான காலப்பகுதியை "வசிப்பிட வாரம்" ஆக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக, உலக வசிப்பிட தினம் தொடர்பில் உத்தேச நிகழ்ச்சித்திட்டங்களை வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் நெறிப்படுத்துகையில் செயற்படுத்துவதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை நிருமாணிப்புகள் மாத்திரம் நிறைவு செய்யப்பட்டிருந்த போதிலும் சுவர்களில் சிமெந்து மேற்பூச்சு பூசப்படாத 1,000 வீடுகள் வீதம் 25 மாவட்டங்களில் 25,000 வீடுகளை தெரிவு செய்து, அவ்வாறு செய்யப்பட்ட வீடொன்றுக்கு 10,000/- ரூபா என்னும் உச்சத்திற்கு உட்பட்டு கட்டடப் பொருட்களை மாத்திரம் வழங்கி வீடுகளை பழுதுபார்க்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.