• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாண்புமிகு அமைச்சர்களுக்கான ஆலோசகர்களின் நியமனம்
- மாண்புமிகு அமைச்சர்களுக்கு ஆலோசகர்களை நியமிப்பதற்கும் அவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசகர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்குமாக கொள்கைத் தீர்மானமொன்றை எடுக்கும் தேவை அமைச்சரவை செயலாளரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அமைச்சரவையினால் பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டது:

* அமைச்சுக்களின் பணிகள் தொடர்பில் குறித்த அமைச்சில் சேவை புரிந்துகொண்டிருக்கும் சிரேட்ட உத்தியோகத்தரிடமிருந்து எதிர்பார்க்க முடியாத ஆலோசனைகளை வழங்க முடியுமென அமைச்சரினால் கருதப்படும், அமைச்சின் விடயநோக்கெல்லை உட்பட அதன் பணிகள் தொடர்பில் பரந்துபட்ட அனுபவம் கொண்ட தேர்ச்சியுள்ளவர்களை மாத்திரம் அமைச்சர்களின் ஆலோசகர்களாக நியமிப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டுமெனவும்;

* அமைச்சர் ஒருவருக்கு அமைச்சரவையின் அங்கீாரத்துடன் ஆலோசகர் ஒருவர் மாத்திரம் நியமிக்கப்பட வேண்டுமெனவும் இருப்பினும் இரண்டு விடயங்கள் அல்லது அதற்கு மேலதிகமாக விடயநோக்கெல்லையைக் கொண்டுள்ள அமைச்சொன்றின் அமைச்சர் ஒருவர் சார்பில் உரிய விடயத்துறை தொடர்பில் தேர்ச்சி மிக்க / அனுபவம் கொண்ட இரண்டு ஆலோசகர்களை மாத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் நியமிக்கலாமெனவும்; அத்துடன்

* அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கும் போது உரிய அமைச்சின் விடய நோக்கெல்லைக்குரியதாக உயர் கல்வி அல்லது தொழிற் தகைமைகளைக் கொண்டிருத்தல், புத்தாக்க இயல்பிலான நிகழ்ச்சித்திட்டங்கள் அல்லது கருத்திட்டங்கள் சம்பந்தமாக முன்னோடியான சேவைகளை வழங்கியிருத்தல், ஆலோசகராக நியமிப்பதற்கு முன்னர் மிக உயர் ஊதியமொன்றைப் பெற்ற தனியார் துறையின் சிரேட்ட மட்டத்திலான பதவியினை வகித்த ஒருவராக இருத்தல், அரசாங்க சேவையில் உயர்மட்ட பதவியினை வகித்திருத்தல் போன்ற விடயங்களின்பால் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும்.