• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 சிறுபோக நெல் அறுவடையின் முகாமைத்துவம்
- 2015‑09‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு 2015 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை மேற்பார்வை செய்வதற்கும் விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை திட்டமிடுதல் சம்பந்தமாக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டும் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழான அமைச்சரவை உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தில் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 120,000 மெற்றிக்தொனை 160,000 மெற்றிக் தொன் வரை 40,000 மெற்றிக் தொன்னால் அதிகரித்தல்.

* இதற்குத் தேவையான 1,906 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாடுகளை வழங்குதல்.

* ஏற்கனவே அரசாங்கத்திற்குச் சொந்தமான நெற்தொகையிலிருந்து தேவையான பாதுகாப்புத் தொகையினை கையிருப்பில் வைத்துக் கொண்டு மீதி நெற்தொகையை நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அரசாங்கத்தின் கொள்வனவு வழிகாட்டலை பின்பற்றி பராதீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து எதிர்வரும் 2015 / 2016 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு போதுமான களஞ்சிய வசதிகளை ஏற்பாடு செய்தல்.

* கூடிய எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் நெல் கொள்வனவின் போது நிகழும் முறைக்கேடுகளை குறைத்தல்.

* அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பத்திலேயே நெல் கொள்வனவு செய்வதற்கு தனியார் துறையின் பங்களிப்பினை விரிவுபடுத்தும் பொருட்டு தற்போது செயற்பாடற்றுள்ள சிறிய, மத்தியதர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை வலுவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

* நெல் தொகைகளை சேகரிக்கும் களஞ்சிய வசதியற்றவர்களுக்கு விசேட தற்காலிக களஞ்சிய வசதிகளை வழங்குவதன் மூலம் கொள்வனவு செய்வதில் போட்டிகரமான நிலையை உருவாக்குதல்.

* நாட்டில் சிறு மற்றும் பெரும் போகங்கள் இரண்டிலும் சிறந்த நெல் அறுவடையின் மூலம் கிடைக்கும் மேலதிக நெற்தொகையை பயன்படுத்தி உயிரியல் எரிபொருள் உற்பத்தி சார்பில் தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவித்தல்.

* அரசிமாவைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளைச் செய்யும் தொழில்களை ஊக்குவித்தல்.

* நீண்டகால தீர்வொன்றாக ஏற்றுமதி சந்தைக்கு ஏற்ற புதிய நெல் இனங்களை விவசாயிகளிடத்தில் பிரபல்யப்படுத்தல்.

* போகமொன்றில் நெல் தவிர வேறு பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் பல்வகைப்படுத்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.