• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"வனச்செய்கை" - தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம்
- வன அளவு குறைவடைதல் இலங்கை முகங்கொடுத்துள்ள முக்கிய சுற்றாடல் பிரச்சினை ஒன்றாவதோடு, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் 2016 -2018 காலப்பகுதிக்குள் மூன்று (03) வருடகால தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 29சதவீதமான நாட்டின் தற்போதைய வன அளவை 32 சதவீதம் வரை மேலும் 6,000 ஹெக்டயரால் அதிகரிப்பது குறியிலக்ககாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கை வன அளவினை அதிகரிக்கும் நோக்குடன் அரச மற்றும் அரசசார்பற்ற தரப்பினர்களினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களில் நிலையான தன்மையை பாதுகாக்கும் விதத்தில் இவை ஒருங்கிணைக்கப்படும்.

2015 ஒக்றோபர் மாதம் முழுவதும் "வனச் செய்கை" என்னும் பெயரில் தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இதனூடாக வனத்தினை அதிகரித்தல், வனத்தின் தரத்தினை மேம்படுத்துதல், இலங்கைக்கு சொந்தமான உயிரினப் பல்வகைமை, இயற்கை சூழல் முறைமை போன்றவற்றை உரிய முறையில் பாதுகாத்தல், திறந்த வெளிகளை மரநடுகைகளுக்காக பயன்படுத்துதல், வர்த்தக வன செய்கையை மேம்படுத்துதலும் முகாமித்தலும் என்பன பொருட்டிலான பல்வேறுபட்ட செயற்பாடுகள் பின்வருமாறு நடைமுறைப்படுத்துவத்றகும் திட்டமிடப் பட்டுள்ளது.

* முதலாவது வாரம்
"வன அரன - ரக்க வரன" என்னும் தொனிப்பொருளின் கீழ் விசேட சுற்றாடல் முறைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அதற்கண்மித்த வனச்செய்கைகளை அதிகரித்தல், பராமரித்தல், பாதுகாத்தல்.

* இரண்டாவது வாரம்
"ஜன ஹிசட்ட - துரு செவன" என்னும் தொனிப்பொருளின் கீழ் குடியேற்றங்களுக்கு அருகாமையில் முகட்டைப் போன்ற நிழல்தரக் கூடிய கிளைத் தண்டுகள் கொண்ட மரங்களை நடுவதன் மூலம் பசுமைத் தன்மையை மேம்படுத்துதலும் அதன் நன்மை மக்களுக்கு கிடைப்பதனை உறுதி செய்தலும்.

* மூன்றாவது வாரம்
"துரு கெப்பகரு - அபி நிரதுரு" என்னும் தொனிப்பொருளின் கீழ் அரச சார்பற்ற அமைப்புகளையும் தனியார்துறையையும் தேசிய மரநடுகை நடவடிக்கை முறையின் செயற்பாட்டு ரீதியிலான பங்காளிகளாக்குதல்.

* நான்காவது வாரம்
"வன அரனட்ட - ஜன சரன" என்னும் தொனிப்பொருளின் கீழ் சமூகத்திலுள்ள பல்வேறுபட்ட குழுக்களை ஆக்கத்திறன் மிக்கதும் நிலையானதுமான வனச்செய்கை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துதல்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் 2015 ஒக்றோபர் மாதத்தில் நாடு முழுவதும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஒக்றோபர் மாதத்தில் சுற்றாடல் பாதுகாப்பு பற்றி அறிவூட்டும் செயலமர்வுகள், மண் பாதுகாப்பு கருத்திட்டம், பல்வேறுபடப்ட சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகள் பிரதேச மட்டத்தில் ஒழுங்கு செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அரசாங்கத்தின் சகல நிறுவனங்களினதும் தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்பின் ஊடாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.