• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
- 1951 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க பிறப்பு, இறப்பு பதிவுசெய்தல் சட்டத்தின் மூலம் மரணங்களை பதிவு செய்யும் அதிகாரம் பதிவாளர் அதிபதி திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பயங்கரவாத நடவடிக்கைகள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற இயற்கைக்கு மாறான நிலைமைகளின் கீழ் மரணித்தவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கு இயலாமற்போகும் சந்தர்ப்பங்களில் அத்தகைய மரணங்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டத்தில் உள்வாங்கப்படாமையினால் இதற்குத் தீர்வொன்றாக 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், ஏதேனும் காரணமொன்றினால் காணாமற்போன ஆள் ஒருவரை மரணித்தவராக குறித்த ஆளின் உறவினர்களினால் ஏற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் அத்தகைய காணாமற் போதலை மரணமொன்றாக பதிவு செய்யும் சாத்தியம் கிடைக்கப்பெறாது. இத்தகைய சந்தரப்பங்களில் காணாமற்போனவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உரித்தாகவேண்டிய உரிமைகள் எவற்றையும் பெற்றுக் கொள்ள முடியாமற்போயுள்ள சந்தர்ப்பங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்கு அமைவாக, இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரும்பாலான நாடுகளினால் வழங்கப்படும் காணாமற்போனவர் / மரணித்ததாக ஐயப்படுபவர் "இல்லாதவர் என்னும் சான்றிதழுக்கு" (Certificate of Absence) சமமான சான்றிதழொன்றை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.