• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலிப்பு நோய் வைத்தியசாலை, சுகாதார நிலைய கருத்திட்டம்
- இலங்கையில் வாழும் வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு நவீன தொழினுட்பத்துடன் கூடிய சகல வசதிகளுடனுமான வைத்தியசாலையொன்றை நிருமாணிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஒத்துழைப்புடன் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் பல்வேறுபட்ட காரணங்களினால் ஓரளவு தாமதமடைந்ததோடு, தற்போது இந்த கருத்திட்டம் சுமார் 90.5 சதவீதம் முடிவடைந்துள்ளது. வைத்தியசாலை சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 2015 திசெம்பர் மாதம் திறந்து வைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் பொது மக்களுக்கு கூடிய சேவையினை வழங்குவதற்குத் தேவையான நவீனமயப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்கு மேலும் தேவைப்படும் சுமார் 12 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மேலதிக நிதியை அபிவிருத்திக்கான சவுதி நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.