• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Kyoto சமவாயத்திற்கு அமைவாக காலநிலை மாற்றங்களை குறைப்பதற்காக இலங்கையின் உடன்பாட்டினை வெளிப்படுத்துதல்
- காலநிலை மாற்றங்கள் சார்ந்த பிரச்சினைகளை கலந்துரையாடும் பொருட்டு சருவதேச சமூகத்தினால் கூட்டாக அங்கீகரித்துக் கொள்ளப்பட்டுள்ள பிரதான சமவாயமான காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் நோக்கங்களை அடையும் பொருட்டு சட்டரீதியாக கட்டுப்பட்டுள்ள தரப்பினர்களினால் 1997 ஆம் ஆண்டில் யப்பான் Kyoto நகரத்தில் செய்துகொள்ளப்பட்ட சமவாயமானது Kyoto சமவாயமாகும்.

2008 - 2012 வரையிலான காலப்பகுதிக்குள் செயற்படுத்தப்பட்ட இந்த சமவாயத்தின் முதலாவது கட்டுப்பாட்டுக் காலத்தில் தொழினுட்ப நாடுகளினால் வெளியேற்றப்படும் பசுமையக வாயுவின் அளவு இந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டில் வெளியேற்றிய பசுமையக வாயுவை விட 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டியிருந்தாலும் 2012 ஆம் ஆண்டளவிலும் கூட இந்த குறியிலக்கினை அடையாமுடியாமற் போயுள்ளது. இதற்கமைவாக, 2012 ஆம் ஆண்டில் தோஹா கட்டார் நகரத்தில் நடாத்தப்பட்ட இந்த சமவாயத்தின் தரப்பினர்களது 8 வது சம்மேளனத்தில் இது தொடர்பிலான 2 ஆவது கட்டுப்பட்டுக் காலமொன்றை விதிக்கும் பிரேரிப்பொன்று செய்துகொள்ளப்பட்டதோடு, தொழினுட்ப நாடுகளினால் வெளியேற்றப்படும் பசுமையக வாயு அளவு இந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டில் வெளியேற்றிய வாயு அளவினை விட ஆகக்குறைந்தது 18 சதவீதத்தால் 2013 - 2020 காலப்பகுதிக்குள் தனி நபடாகவோ அல்லது கூட்டாகவோ குறைக்கப்படுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

அபிவிருத்தி அடைந்த தொழினுட்ப நாடுகளினால் பசுமையக வாயுவினை அதிகளவில் வெளியிடுவதன் பெறுபேறாக உருவாகக் கூடிய உலகளாவிய ரீதியில் உஷ்ணநிலை அதிகரித்தல் இதன் காரணமாக சமுத்திர நீர்மட்டம் உயர்தல் போன்ற நிலைமைகள் காரணமாக இலங்கை போன்ற தீவு நாடுகள் பலவற்றுக்கு பிரதிகூலமான பாதிப்பு ஏற்படும் வாய்ப்புக்கள் நிலவுகின்றன.

Kyoto சமவாயத்தின் இரண்டாவது கட்டுப்பாட்டுக்கால எல்லையை அமுல்படுத்துவதற்கு உடன்படுவதன் மூலம் அபிவிருத்தி அடைந்த தொழினுட்ப நாடுகளினால் செய்யப்படும் அதிக காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் பொருட்டு கட்டாயப்படுத்துவதற்கு இலங்கை போன்ற உறுப்பு நாடுகளுக்கு இயலுமாகுமென்பதோடு, இது சம்பந்தமாக பல்வேறுபட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உறுப்பு நாடுகளிடமிருந்து வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதும் இலகுவாக அமையும்.

இதற்கமைவாக, Kyoto சமவாயத்தின் உத்தேச இரண்டாவது கட்டுப்பாட்டுக் கால எல்லையை அமுல்படுத்துவதற்காக மேலும் தேவைப்படும் ஒத்தாசைகளை வழங்குவதன் மூலம் புவியைப் பாதுகாப்பதற்கு இலங்கை காட்டும் அதன் அக்கறையை வெளிப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.