• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க கொள்வனவு செயற்பாட்டினை ஒழுங்குறுத்துதல்
- அரசாங்கத்தின் வருடாந்த செலவில் மிகக்கூடுதலான அளவு பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் நிருமாணிப்பு, மூலதன பொருட்களின் கொள்வனவு, மருத்துப் பொருட்கள், உர மானியம், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் போன்ற பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறுபட்ட பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்யும் பொருட்டு செலவு செய்யப்படுகின்றது. இந்த கொள்வனவுகள் அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்படுவதோடு, அரசாங்கத்திற்கு இந்த செயற்பாட்டில் நிலவும் சில குறைபாடுகள் காரணமாக பல தாமதங்களுக்கும் பிரதிகூலமான நிலைமைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆதலால் அரசாங்கத்தின் நிதிகளை மிக சிக்கனமாக செலவு செய்வதற்கு இயலுமாகும் வகையிலும் வீண் விரயத்தைத் தடுத்து ஊழல் மோசடி மற்றும் முறைக்கேடுகள் என்பவற்றைத் தவிர்த்து ஏற்கனவே நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாட்டினை மிக வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதாக்கும் பொருட்டு பொருத்தமான பிரேரிப்புகளைச் சமர்ப்பிப்பதற்காக இந்த நோக்கம் சம்பந்தமாக செயலாற்றி அனுபவமிக்க அரசாங்க சேவையில் சேவைபுரிந்த தேர்ச்சி மிக்க உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.