• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - 2015 (ஒக்ரோபர் மாத வழங்குகை

- உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மானிய விலையின் கீழ் கமக்காரர்களுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் கமத்தொழில் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு, தேவையான உரம் மாதாந்த தேவைக்கு அமைவாக அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி (லக் பொஹர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி (கொமர்ஷல் பொஹர) மூலம் வழங்கப்படுகின்றது. இதற்கமைவாக, 2015 ஒக்றோபர் மாதத்தில் கமக்காரர்களுக்கிடையில் பகிர்நதளிப்பதற்குத் தேவையான உர அளவினை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த கம்பனிகளின் ஊடாக பெற்றுக் கொள்வதற்குரியதான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.