• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாகோவுக்கும் வவுனியாவுக்கும் இடையிலான புகையிரதப் பாதையை புனரமைத்தல்

- “பிரயாணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்காக பாதுகாப்பான நம்பத்தகுந்த உரிய நேரத்திற்குச் செல்லும் புகையிரத போக்குவரத்துச் சேவையொன்றை வழங்குதல்" என்பது புகையிரத சேவையின் அடிப்படை நோக்கமாகும். புகையிரதப் பாதைகளை முறையாக விருத்தி செய்தல் இதன் முக்கிய நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டு அத்தியாவசிய காரணியொன்றாக அரசாங்கம் இனங்கண்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வடக்கு புகையிரதப் பாதை அபிவிருத்தி பணிகளின் கீழ் வவுனியாவுக்கு அப்பால் புதிதாக நிருமாணிக்கப்பட்ட புகையிரதப் பாதைகளுடன் மாகோவிலிருந்து வவுனியா வரையிலான புகையிரதப் பாதைப் பகுதியை விருத்தி செய்யும் முக்கியத்துவத்தினால் 120.7 கிலோ மீற்றர் கொண்ட (வளைய பாதை 5 கி.மீ அடங்கலாக) இந்த புகையிரதப் பாதையை புனரமைப்பதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைவாக, மாகோ - வவுனியா புகையிரதப் பாதை அபிவிருத்தி செய்யப்படுவதோடு, அதன் முதலாம் கட்டமாக அநுராதபுரம் - வவுனியா (கி.மீ.49.4) மற்றும் இரண்டாம் கட்டமாக மாகோ - அநுராதபுரம் (கி.மீ.66.4) என புனரமைக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான கொங்கீறிட் கிடைக் கட்டடைகள் அடங்கலாக புகையிரதப் பாதைக்குத் தேவையான பொருட்களையும் கருவிகளையும் இயலுமான வரை உள்நாட்டில் கொள்வனவு செய்துகொண்டும் திணைக்களத்தின் பதவியணியைக் கொண்டும் புனரமைப்பு வேலைகளை செய்யும் பொருட்டு உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.