• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழல், முறையற்ற நிருவாகம், முறைக்கேடுகள் பற்றி புலனாய்வு செய்தல்

- உள்ளகப் போக்குவரத்து அமைச்சிலும் அதன் துணை நிறுவனங்களிலும் கடந்த ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் ஊழல், முறையற்ற நிருவாகம், முறைக்கேடுகள் சம்பந்தமாக புலனாய்வு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரின் ஆலோசனையின் மீது அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட புலனாய்வுக் குழுவினால் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக சமர்ப்பிக்கப் பட்டுள்ள அறிக்கைக்கு அமைவாக உரிய நிறுவனங்களுக்கும் பொறுப்பு சொல்ல வேண்டியவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பறத்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகள் உருவாகாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* 2015 சனாதிபதி தேர்தலின் போது விளம்பர நோக்கங்களுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை வசு வண்டிகளை வழங்கியதன் சார்பில் 142 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகை இதுவரை அறவிடப்படாமை;

* இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குநர் கடனின் மீது 2,200 புதிய வசு வண்டிகள் கொள்வனவு செய்யும் போது கிடைக்க வேண்டிய கழிவு கிடைக்காமற் போனமை;

* இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வரி சலுகையின் மீது இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்யும் போது எதிர்பார்க்கப்பட்ட தரம் மற்றும் சலுகை இல்லாமற் போனமை;

* இலங்கை போக்குவரத்துச் சபையின் இலச்சினையைப் பயன்படுத்தி தனியார் வசு வண்டிகள் செலுத்தப்பட்டமை;

* பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 20 சொகுசு பஸ் வண்டிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்பட்டமை;

* வடக்கு புகையிரதப் பாதையை நிருமாணிக்கும் போது கூடிய செலவுடனான மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டமை;

* மாத்தறை - கதிர்காமம் புகையிரதப் பாதையை நிருமாணிக்கும் போது கூடிய செலவுடனான மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டமை;

* முறையான வழிமுறைக்குப் புறம்பாக புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை வெளி நிறுவனங்களுக்கு உடைமையாக்கியமையும் தனியார்களுக்கு குத்தகைக்கு அளித்தமையும்;

* தனியார் துறையுடன் புகையிரதப் பெட்டிகள் / விசேட புகையிரதங்கள் விடப்பட்டமை, வைஸ்ரோய் - 2 விசேட புகையிரத செயற்பாட்டினால் நிகழ்ந்துள்ள நட்டம்; அத்துடன்

* பழைய இரும்பு விற்பனையின் போது அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைக்கு புறம்பாக செயலாற்றியுள்ளமை.