• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கும் கொரிய குடியரசின் தேசிய நீதிச் சேவைக்கும் இடையில் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை

- அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கும் கொரிய குடியரசின் தேசிய நீதிச் சேவைக்கும் இடையில் பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்காக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் தடயவியல் ஆராய்ச்சிப் பணிகளின் தரத்தினை மேம்படுத்துவதோடு, இதன் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்படும் குற்றவியல் விசாரணைகளை மேலும் விருத்தி செய்தல்;

* தடயவியல் துறைக்குரிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்தல், சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பரிசீலித்தல், நஞ்சியல், போதைப் பொருள் புலனாய்வு, வெடிப்பொருள் மற்றும் சுடுகலன்கள் புலனாய்வு போன்ற துறைகளிலும் தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள DNA ஆய்வுகூடத்தில் பரிசோதனைகளை விருத்தி செய்வதற்கும் புதிய வழிமுறைகளைத் தாபித்தல்;

* குற்றவியல் பரிசோதனை துறையில் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சி முறைகள் பற்றிய அறிவு, இந்த துறைசார்ந்த விஞ்ஞானிகளின் அறிவு, குற்றவியல் விசாரணை மேற்கொள்வதற்காகவுள்ள தர்க்க ரீதியான அத்துடன் நடைமுறை அறிவினைப் பரிமாறிக் கொள்ளல்;

* செயலமர்வுகள், மாநாடுகள், பயிற்சிப்பாடநெறிகள், நிபுணர்களின் கூட்டங்கள் என்பனவற்றின் மூலம பரஸ்பரம் அறிவினைப் பரிமாறிக் கொள்ளல்;

* அதிநவீன ஆய்வுகூட உபரகணங்கள், கருவிகள் கொள்வனவின் போது ஒத்துழைப்பினை நல்குதல்; அத்துடன்

* சருவதேச மட்டத்தில் "அங்கீரிக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள்" அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகூடங்களின் தரங்களை சருவதேச ரீதியில் உறுதிப்படுத்துதல்.