• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலிருந்து சீனாவுக்கு வாழை ஏற்றுமதியின் போது தாவர தொற்று தடைகாப்பு தேவைகள் தொடர்பில் சீனாவின் தரம்மிக்க மேற்பார்வை, ஆய்வு மற்றும் தொற்று தடைகாப்பு விடயங்களுக்கான பொது நிருவாக நிறுவகத்திற்கும் இலங்கையின் கமத்தொழில் அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுதல்

- இலங்கையில் காலநிலை மற்றும் சுற்றாடல் நிலைமைகளுக்கு அமைவாக மிக வெற்றிகரமாக பயிர் செய்யப்படும் வாழை உள்நாட்டு பழத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் அதேபோன்று ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்ற பயிரொன்றாகும் இலங்கையின் நட்புநாடான சீனாவுடன் வர்த்தக உறவுகளை விருத்தி செய்து கொண்டு வாழை ஏற்றுமதி செய்வதற்கு சிறந்த கேள்வி நிலவுகின்றது. இதற்காக இரண்டு நாடுகளினதும் தாவர தடைகாப்பு சட்டங்கள் மற்றும் கட்டளைகளுக்கு உடன்பட்டு சீனாவுக்கு வாழை ஏற்றுமதி செய்வதற்கும் வாழைச் செய்கை நிலங்களையும் பொதியிடல் இடங்களையும் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் சீனாவின் தரம்மிக்க மேற்பார்வை, ஆய்வு மற்றும் தொற்று தடைகாப்பு விடயங்களுக்கான பொது நிருவாக நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.