• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய குருதியேற்றல் சேவையிடம் பிளாஸ்மா கொள்வனவு செய்தல்

- குருதிக்காக இதுவரை மாற்றீடொன்று கண்டறியப்படவில்லையென்பதோடு, நோயாளிகளுக்குத் தேவையான குருதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இதுவரை குருதி "முழுமையான குருதி" என்ற அடிப்படையில் குருதியேற்றுவதற்கு பழக்கப்பட்டிருந்தாலும் தற்போது இந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது. குருதி அலகொன்று சிபாரிசு செய்யப்பட்டவாறு முறையாக பிரித்தெடுக்கப்பட்டால் அதில் நான்கு கூறுகள் வரை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் உள்ளமையினால் நோயாளியொருவருக்குத் தேவையான குருதி கூறொன்றினை மாத்திரம் வழங்கி மீதி கூறுகள் அவை தேவைப்படும் வேறு நோயாளிகளுக்கு வழங்கும் சாத்தியம் உள்ளது. தேசிய குருதியேற்றல் சேவை மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 லீற்றர் பிளாஸ்மா நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்படு கின்றதோடு, கூறுகளாக பிரித்தெடுப்பதற்கான வசதி இல்லாமையினால் தற்போது அப்புறப்படுத்தப்படும் மீதி 40,000 லீற்றர் பிளாஸ்மா புரத உற்பத்திக்கான தொழினுட்பம் காணப்படும் கம்பனிகளுக்கு வழங்கும் சாத்தியம் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இலங்கைக்குத் தேவையான சகல விதமான பிளாஸ்மா புரதத் தேவைகள், குருதி கூறுகளைப் பிரித்து பிளாஸ்மா புரதங்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பனிகள் / நிறுவனங்களிடமிருந்து பாரிய செலவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்கமைவாக, மேலதிக பிளாஸ்மா அளவினை பிளாஸ்மா புரதம் உற்பத்திகாக வழங்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.