• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வைத்தியசாலை சதுக்கத்தை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம் - போசெவனவத்த அத்துமீறிய குடியிருப்பாளர்களிடமிருந்து விடுவித்துக் கொள்ளல்

- இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவானது நாட்டின் சகல பிரதேசங்களில் இருந்தும் வருகை தரும் இருதய நோயாளர்களுக்கு மிகுந்த உயர்வான நோய் சிகிச்சை சேவையொன்றை நடாத்திச் செல்கின்றது. இந்த இருதய நோய் பிரிவு நடாத்திச் செல்லப்படும் கட்டடத் தொகுதி மிக பழமையானதோடு, தற்போதைய சேவை வழங்குகை தேவைக்கு அங்குள்ள இடவசதி எந்தவகையிலும் போதுமானதல்ல. ஆதலால், சுகாதார பதவியிணர்களும் அதேபோன்று நோயாளிகளும் மிகுந்த உட்சிக்கள் வாய்ந்த கஷ்டங்களுக்கு ஆளாகின்றனர். இதற்கு மாற்று வழியாக இருதய நோய் பிரிவை விரிவுபடுத்தவேண்டியுள்ளதோடு, அதற்காக நிலவும் நில அளவு போதுமானதல்ல. ஆதலால், இருதயநோய் பிரிவுக்கு அருகாமையில் தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியொன்றான போசெவனவத்த என்னும் காணியிலுள்ள அத்துமீறிய குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான 63 வீட்டு அலகுகளுக்குப் பதிலாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப் படுத்தப்படும் நகர புனரமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் வேறு இடமொன்றில் நிருமாணிக்கப்படும் தொடர்மாடி வீடமைப்புக் கருத்திட்டமொன்றிலிருந்து மாற்று வீடுகளை வழங்கி இருதயநோய் பிரிவுக்குத் தேவையான வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு இந்த காணியை பயன்படுத்துவதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.