• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராசதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு உரித்துடையவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் உடன்படிக்கை

- இலங்கை மற்றும் கசகஸ்தான் பிரசைகளுக்கு இருநாடுகளுக்குமிடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்தும் பொருட்டு இதற்குரிய நடவடிக்கை முறைகளை தளர்த்துவதற்கும் இருநாடுகளுக்கு மிடையிலான நட்புறவினை மேலும் பலப்படுத்துவதற்கும் இந்த உடன்படிக்கையின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உடன்படிக்கையின் தரப்பினர் ஒருவரான நாடொன்றின் இராசதந்திர, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டொன்று அல்லது சேவை / அலுவலக கடவுச்சீட்டு உரித்துடையவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாமல் 30 நாட்களுக்கு மற்றைய நாட்டிற்கு நுழைவதற்கும் அந்த நாட்டின் ஊடாக வேறு நாடொன்றுக்குச் செல்வதற்கும் அனுமதி கிடைக்கப் பெறும். இதற்கமைவாக, இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையேயான மேற்போந்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் பொருட்டு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.