• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜகல தொல்பொருளியல் ஒதுக்கத்தின் தொல்பொருளியல் மரபுரிமை முகாமைத்துவம்

- கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உகண பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ரஜகலதென்ன ஹைத்திஹாசிக்க அரியாகார விகாரை மன்னன் லஜ்ஜிதிஸ்ஸவினால் செய்யப்பட்ட விகாரையாக கருதப்படுகின்றது. இந்த விகாரைத் தொகுதி, பப்பன விகாரை மற்றும் ஆராமவாசி விகாரை ஆகிய இரண்டு (02) விகாரை வகைகளின் கூட்டாக கருதப்படுவதோடு, அதன் எச்சங்கள் சுமார் 1,025 ஏக்கர் பூமி பிரதேசத்தில் பரந்துள்ளது. இந்தப் பிரதேசத்திலுள்ள தாதுகோபமொன்றில் இலங்கைக்கு பௌத்த தர்மத்தை கொண்டுவந்த மிஹிந்து மஹராஹத்தன் வான்சே அவர்களின் உடற்கூறுகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலுள்ள தொல்பொருளியல் முக்கியத்துவமுடைய இடங்களை அழிவிலிருந்து மீட்டு அவற்றைப் பாதுகாத்து எதிர்காலத்தில் பேணப்படுவதனை உறுதி செய்வதற்கும் சுற்றுலாத் தொழிலை மேம்படுததும் நோக்கிலும் தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தினாலும் கூட்டுக் கருத்திட்டமொன்றாக 2012 ஆம் ஆண்டிலிருந்து ரஜகல புனரமைப்புக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு 323.8 மில்லியன் ரூபா ஆவதோடு, அமெரிக்க தூதரக நிதியத்திலிருந்தும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட நிதியத்தையும் கொண்டு 2014 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கருத்திட்டத்திற்காக உறப்பட்டுள்ள செலவு 55.5 மில்லியன் ரூபாவாகும். இந்தக் கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான 268.3 மில்லியன் ரூபாவை அரசாங்க திரட்டு நிதியத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.