• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹகந்த - களுகங்கை கமத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு காணி சுவீகரி்த்துக் கொள்கின்றமையினால் பாதிக்கப்படும் குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல் - கருத்திட்டம் தாமதமடைவதன் காரணமாக குடும்ப எண்ணிக்கை அதிகரித்தல், நன்மைகளை மீளமைத்தல் உட்பட மாற்று பிரேரிப்புகள் முதலியவற்றுக்கு அங்கீகாரம் கோரல்

- மொரகஹகந்த - களுகங்கை கமத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் நாவுல பிரதேச செயலகப் பிரிவின் 12 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 1,747 குடும்பங்களும் லக்கல பல்லேகம பிரதேச செயலகப் பிரிவின் 11 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 907 குடும்பங்களும் பாதிக்கப்படும் குடும்பங்களாக இனங்காணப்பட்டுள்ளது. ஆயினும், கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் 8 வருடங்களால் தாமதப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன:

* பாதிப்புக்குள்ளாகும் குழும்பங்களில் புதிதாக திருமணமானதன் மீது 224 குடும்பங்கள் புதிதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களாக இந்த எண்ணிக்கையில் சேர்ந்துள்ளமை;

* புதிதாக சேர்ந்த குடும்பங்கள் இந்தப் பிரதேசத்தைக் கைவிட்டு மெதிரிகிரிய பிரதேசத்தில் குடியமர்வதற்கு விரும்பாமை;

* 2007 ஆம் ஆண்டில் மெதிரிகிரிய பிரதேசத்திற்கு குடியமர்வதற்காக செல்வதற்கு விருப்பினைத் தெரிவித்த 345 குடும்பங்கள் குறித்த பிரதேசத்தில் குடியிருப்பதற்காக செல்வதற்கு விரும்பாமை;

* அதிகரித்த குடும்ப அலகுகளுக்கும் மெதிரிகிரிய பிரதேசத்தில் குடியமர்வதற்காகச் செல்வதற்கு விரும்பாத குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகளை வழங்க நேர்ந்துள்ளமை.

மேற்போந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக குறித்த பிரதேசத்திலும் அதற்கண்மித்த பிரதேசங்களிலும் அரசாங்கத்தின் பெருந்தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமானதும் இனங்காணப்பட்டுள்ளதுமான காணிகளை உடைமையாக்கிக் கொண்டு மேற்போந்த கருத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வழங்குவதற்கும் இந்த குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு நட்டஈடு செலுத்துவதற்கும் மாற்றுக் காணிகளில் வீடுகளை நிருமாணிப்பதற்காக உதவி வழங்குவதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.