• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டட நிருமாணிப்புக் கருத்திட்டம்

- பத்தரமுல்லை, அக்குரேகொட பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு படை தலைமையக கட்டடத் தொகுதியின் நிருமாணிப்புக் கருத்திட்டத்திற்குரிய பணிகள் சம்பந்தமாக பரிசீலனை செய்து அறிக்கையிடும் பொருட்டு அமைச்சரவையினால் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இயைபுள்ள கருத்திட்டத்தின் மதியுரைச் சேவை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கம்பனியொன்று சம்பந்தமாக இந்த உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலுள்ள பின்வரும் விடயங்கள் பற்றி அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது:

* போட்டிக் கேள்வி கோரப்படாது இந்தக் கம்பனி தெரிவுசெய்யப்பட்டுள்ளதென்பதுவும்;

* மதியுரைச் சேவை வழங்கும் பொருட்டு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இந்தக் கம்பனி, கம்பனியொன்றாக கம்பனிகள் பதிவாளரின் கீழும் இலங்கை கட்டடக் கலைஞ்ர்களின் நிறுவனத்திலும் பதிவு செய்து கொண்டுள்ளதென்பதுவும்;

* இயைபுள்ள அதிகாரபீடங்களினால் இந்தக் கம்பனியின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளவில்லையென்பதுவும்; அத்துடன்

* மொத்தக் கருத்திட்டத்தின் மதியுரைச் சேவைக்காக இந்தக் கம்பனிக்கு 606.032 மில்லியன் ரூபாவை பணமாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2015‑05‑31 ஆம் திகதியன்றுக்கு இந்தக் கம்பனி்க்கு 509.926 மில்லியன் ரூபா (இது வழங்கப்பட வேண்டிய தொகையின் 83 சதவீதமாகும்) வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரை கருத்திட்டத்தின் மொத்த வேலை அளவின் 30.02 சதவீதம் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென்பதுவும்.

குறித்த மதியுரை கம்பனி சம்பந்தமாக உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்போந்த விடயங்கள் தொடர்பில் விசாரணையொன்றை நடாத்துவதற்கும் இந்த விசாரணை முடிவினை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமானவாறு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.