• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாடி வீடு உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்தல்

- கொழும்பு நகரத்திலுள்ள மாடி வீடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சுமார் 1,700 குடும்பங்கள் வசிக்கும் பின்வரும் 13 வீடமைப்புக் கருத்திட்டங்களில் பொதுவழி, மழைநீர் கால்வாய் முறைமை போன்றவற்றை 143.29 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் பழுதுபார்த்தல் வேலைகளைச் செய்யும் பொருட்டு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* போலமேசவத்த வீடமைப்புத் திட்டம்
* வேலுவனாராம வீடமைப்புத் திட்டம்
* எல்விட்டிகல வீடமைப்புத் திட்டம்
* மல்லிகாராம வீடமைப்புத் திட்டம்
* சென்ரல் வீதி வீடமைப்புத் திட்டம்
* கம்மல்வத்த வீடமைப்புத் திட்டம்
* ஜும்மா மஸ்ஜித் வீடமைப்புத் திட்டம்
* திசாநாயக்கவத்த வீடமைப்புத் திட்டம்
* அளுத்மாவத்தை வீடமைப்புத் திட்டம்
* டயஸ்பிளேஸ் வீடமைப்புத் திட்டம்
* புலூமெண்டால் வீடமைப்புத் திட்டம்
* புனித ஜேம்ஸ் வீதி வீடமைப்புத் திட்டம்
* புதுக்கடை வீடமைப்புத் திட்டம்