• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முப்படைகளையும் சேர்ந்த இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை சீராக்குதல்

- பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய விதத்தில் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை பற்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

* வரவுசெலவுத்திட்ட பற்றாக் குறையை மொத்த தேசிய உற்பத்தியின் 5.5% இற்கு வரையறுத்தல்;

* அரசாங்க முதலீட்டை மொத்த தேசிய உற்பத்தியின் 6% - 8% மட்டத்தில் பேணுதல்;

* தனியார்துறையின் முதலீட்டை ​மொத்த தேசிய உற்பத்தியின் 22% - 24% இற்கு கொண்டு வருவதை ஊக்குவித்தல்;

* பொருளாதாரத்தின் முழு முதலீட்டு மட்டத்தை மொத்த தேசிய உற்பத்தியின் 30% மட்டத்தில் அதிகரித்தல்; அத்துடன்

* 2016 - 2018 நடுத்தவணைகால கட்டமைப்புக்குள் 8% இற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடைதல்.

நீண்டகாலமாக முன்கொணரப்பட்ட தீர்வு செய்யப்படாத பொறுப்புக்களை தீர்வு செய்யும் சவாலையும் வெற்றி கொண்டு, மிக பயனுள்ள திறைசேரி முகாமைத்துவத்தினை உருவாக்கிக் கொள்வதற்கு வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் முறையொன்றாக 2016 ஆம் ஆண்டிலிருந்து பூச்சிய அடிப்படை வரவுசெலவுத்திட்ட முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக, துறைகளை அடிப்படையாகக் கொண்டு வள பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள தெனவும் இதற்கான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கி "2016 வரவுசெலவுத்திட்ட அழைப்பு சுற்றறிக்கை” வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தயாரித்தல் சம்பந்தமாக அமைச்சுக்களுடன் நடாத்தப்படும் ஆரம்ப மட்ட கலந்துரையாடல்கள் 2015 ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.