• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்களை அச்சிடுதல்

- கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முக்கிய பணியாவது நாட்டிலுள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கும் பிரிவெனாக்களின் பிக்கு மாணவர்களுக்கும் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிட்டு உரிய காலப் பகுதிக்குள் இலவசமாக பகிர்ந்தளித்தலாகும். இதற்கான 410 வகை புத்தகங்களிலிருந்து 80 வகைகளின் 13,210,600 பிரதிகள் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை ஐக்கிய செய்தி பத்திரிகைக் கம்பனி, அரசாங்க அச்சகத் திணைக்களம் என்பவற்றைக் கொண்டு அச்சிட்டுக் கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, உரிய அச்சிடலுக்கான கட்டளைகளும்கூட இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 330 வகை புத்தகங்களின் 30,862,500 பிரதிகள் தனியார் துறையைச் சார்ந்த அச்சகங்களில் அச்சிடப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள பாடசாலைப் புத்தகங்களை 2015‑12‑03 ஆம் திகதியன்றுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்கு இயலுமாகும் வகையில் 330 வகை புத்தகங்களின் 30,862,500 பிரதிகளை 19 தனியார்துறை அச்சகங்களைக் கொண்டு அச்சிட்டுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.