• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிஓயா, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆடை மற்றும் அதுசார்ந்த தொழில்களை மேம்படுத்துதல்

- வெலிஓயா, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் தொழிலற்ற, மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வருவாய் மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக புடைவைத் தொழிற்சாலைகளையும் அதுசார்ந்த தொழில்களையும் உருவாக்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்திற்கு அமைவாக கைத்தொழிற்சாலை கட்டடங்களை நிருமாணித்தலானது முதலீட்டாளர்களின் நிதியை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் இந்த பிரதேசம் உள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் போன்ற கஷ்ட பிரதேச மாவட்டங்களில் இத்தகைய கட்டடங்கள் சார்பில் முதலீட்டு செய்வதற்கு முதலீட்டாளர்கள் காட்டும் தயக்கம் காரணமாக இந்த நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் உள்ளது. புடைவைக் கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு 2,500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த இரண்டு செயலகப் பிரிவுகளிலும் உள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதோடு, இதில் சுமார் 500 பேர்கள் இந்தத் துறையில் அனுபவமிக்க பயிற்றப்பட்ட தொழிலாளர்களாவர்.

இதற்கமைவாக, வெலிஓயா, முசலி பிரதேச செயலகப் பிரிவுகளில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் மூன்று கைத்தொழிற்சாலைகள் வீதம் அரசாங்கத்தினால் நிருமாணிப்பதற்கும் அதற்காக அரசாங்கத்தினால் உறப்படும் செலவுகள் அரச விலை மதிப்பீட்டின் மீது குத்தகைக் கூலியாக நீண்டகாலம் முதலீட்டாளர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்வதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.