• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை எரிசக்தி அபிவிருத்தியும் எரிசக்தி வினைத்திறனை விருத்தி செய்யும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டமும்

- ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 2014 ஆம் ஆண்டில் பெறப்பட்ட கடன் உதவியின் கீழ் பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி வினைத்திறனை விருத்தி செய்யும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் பொதி 3 கீழ் மத்தியதர வோல்ட்டேஜ் வலையமைப்பின் வினைத்திறன் மேம்படுத்தப்படுகின்றது. இதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்வதற்குரிய ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக வழங்கும் பொருட்டு மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.