• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மின்சார வசதிகளை இலவசமாக வழங்குதல்

- மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல குடும்பங்களையும் மீளப் பணிக்கமர்த்துவதற்குத் தேவையான பணிகளை அரசாங்கம் தொடர்ச்சியாக எடுத்து வருகின்றது. ஏற்கனவே 232,828 குடும்பங்கள் இவ்வாறு மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதோடு, இந்த குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 796,342 ஆகும். இந்த குடும்பங்களுக்கு மின்சாரம், நீர், துப்பரவேற்பாட்டு வசதிகள் போன்றவற்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கமைவாக, வடமாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட 20,000 குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்புகளை வழங்குவதற்கும் 2015 ஆம் ஆண்டிலே மீளக்குடியமர்த்தப்பட்ட 5,000 குடும்பங்களுக்கு வீட்டு மின்சார இணைப்புகளை வழங்குவதற்குமாக 105 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.