• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிபாரிசுசெய்யப்பட்ட பசளை வகைகளுக்குப் புறம்பாக இறக்குமதி செய்யப்படும் பசளை வகைகளுக்கான தரப்படுத்தல்

- கமப் பயிர்களுக்கு பசளையிடும் போது பயிர் விசேடம், மண்வகை மற்றும் தன்மை, காலநிலை வலயம் போன்ற காரணிகளின் மீது கமத்தொழில் திணைக்களத்தினால் அந்தந்த கமப் பயிர்களுக்காக சிபாரிசு செய்யப்படும் பசளையின் அளவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வர்ததக ரீதியில் கமத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உயர் பொருளாதார நலன்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இரசாயன பசளைகளை பரவலாக பயன்படுத்துகின்றனர். இரசாயன பசளையை உரிய அளவினை விட பயன்படுத்துதல், தரத்தில் குறைந்த பசளைகளை இடுதல் போன்ற காரணங்களினால் கமத்தொழில் உற்பத்திகளில் சுகாதார பாதுகாப்பு சவாலுக்கு உட்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக நுகர்வோரின் சுகாதாரத்திற்கும் பிரதிகூலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சரியாக கலக்கப்படாத பசளை, உரிய பசளை சிபாரிசுக்கு அமைவாக கலக்கப்பட்டு அந்தந்த பயிர்களுக்கு இடவேண்டியிருந்தாலும் வசதி மற்றும் வர்த்தக அறிவித்தல்கள் மீது இரசாயன பசளை கலவைகளை தங்களுடைய பயிர்களுக்கு உரிய அளவினை விஞ்சி இடுவதற்கு விவசாயிகள் பழக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தையில் பல்வேறுபட்ட நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பல வகையான தரம் குறைந்த இரசாயன பசளைக் கலவைகள் 100 வகைக்கு மேலாக காணக்கிடைக்கின்றதோடு, பசளை இறக்குமதி செய்பவர்களின் உடன்பாட்டினைப் பெற்றுக் கொண்டு இந்த பசளைக்கு உரிய தரத்தினைப் பிரகடனப்படுத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.