• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Broadlands நீர் மின் கருத்திட்டம்

- Broadlands நீர் மின் நிலையம் அம்பகமுவ கோரளை மற்றும் யட்டியந்தொட்டை பிரதேச செயலக பிரிவுகள் இரண்டிற்கிடையில் அமைந்துள்ள கித்துள்கல பிரதேசத்தில் நிருமாணிக்கப் படவுள்ளதோடு, இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் ஆற்றல் 35 மெகாவோட்களாகும். இந்த நீர் மின் நிலையம் இலங்கையில் புதுபிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியின் முக்கிய மைல்கல்லாவதோடு, இது இந்த நாட்டில் நிருமாணிக்கப்படும் மத்திய தரத்திலான ஒருசில நீர் மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நீர் மின் நிலையத்தை நிருமாணிப்பதற்குத் தேவையான நிதி வசதிகள் சீனாவின் கைத்தொழில், வர்த்தக வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்த வசதியின் காப்புறுதியை சீன ஏற்றுமதி, கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த காப்புறுதி நிறுவனத்தை குறித்த கடன் வசதியின் கூட்டு உரிமையாளராக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு மின்வலு, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.