• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய பொலன்நறுவை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்

- பொலன்நறுவை நகரம் உட்பட அதன் பிரதான நகர மைய நிலையங்களாக கருதப்படும் பொலன்நறுவை, கதுருவெல, புதிய நகரம் முறையே மரபுரிமை நகரம், வர்த்தக நகரம், நிருவாக நகரம் என துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இந்த நகரம் நாளொன்றுக்கு 80,000 இற்கு மேற்பட்ட மக்களின் தேவைகளை நிறைவு செய்கின்றதென்பதுவும் இந்த எண்ணிக்கை துரிதகதியில் அதிகரித்துவருகின்றதென்பதுவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாகன நெரிசல், வாகன தரிப்பிடப் பிரச்சினைகள், சுற்றாடல் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு பிரதான நகரமொன்றாக பொலன்நறுவை நகரத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தயாரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டத்தையும் அதற்கு ஒருங்கிணைவாக நகர அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்மொழிந்துள்ளது. இதற்கமைவாக, வர்த்தக அபிவிருத்தி, மரபுரிமைகளின் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு, சுற்றாடல் மற்றும் காணிகளின் அழகுபடுத்தல் போன்ற துறைகளுக்குரிய பல கருத்திட்டங்களைக் கொண்ட பாரிய பொலன்நறுவை, நகர அபிவிருத்தி கருத்திட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய 16,650 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் முன்னுரிமை அடிப்படையில் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.