• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க பெறுகைகள் பற்றிய தகவல்

- 2015 ஆம் ஆண்டின் யூலை மாத ஆரம்பத்தில் நிலவிய அரசாங்க பெறுகைகள் பற்றிய நிலைமை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2015‑07‑03 ஆம் திகதிவரை பெறப்பட்ட கடன் அளவு பின்வருமாறாகும்:


கடன் வகை ரூபா மில்லியன்
திறைசேரி முறி 3,629,903.46
திறைசேரி உண்டியல் 796,031.36
ரூபாக் கடன் 28,151.40
இலங்கை அபிவிருத்தி முறி 529,388.66
அன்னிய செலாவணி வங்கி கூறுகளின் மூலம் பெறப்பட்ட கடன் 20,040.00
இலங்கை மத்திய வங்கியின் முற்பணம் 152,941.47
வங்கி மேலதிகப் பற்று 122,309.52
பிற (தேறிய வைப்புகள்) 34,947.57
மொத்த உள்நாட்டு கடன் 5,313,713.44
வெளிநாட்டுக் கடன் 2,646,225.95
மொத்தக் கடன் 7,959,939.39