• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுங்க திணைக்களத்திற்கு கொள்கலன் பரிசோதனை முறைமையொன்றை (Container Scanning System) தாபித்தல்
- நாளொன்றில் சுமார் 1,100 இறக்குமதி கொள்கலன்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விடுவிப்பதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு இந்த கொள்கலன்களில் இருந்து தற்போக்காக தெரிவு செய்யப்பட்ட 10% - 15% அளவுகள் மாத்திரம் திணைக்களத்திடமுள்ள ஸ்கான் இயந்திரத்தினூடாக ஊடுகதிர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. ஏற்கனவேயுள்ள திணைக்களத்திற்குச் சொந்தமான ஸ்கான் இயந்திரங்கள் எட்டு வருடங்கள் பழைமை வாய்ந்தவையாவதோடு எந்நேரமும் பழுதுபார்க்க வேண்டிய நிலையும் உள்ளது. நிதி அமைச்சரினால் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வினைத்திறனையும் ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்குடன் நவீன தொழினுட்பத்துடன்கூடிய கொள்கலன் பரிசோதனை முறைமையொன்றை (Container Scanning System) தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டது. இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்குத் தேவையான மனிதவளம் மற்றும் உபகரணங்களுக்கான செலவு உட்பட அவற்றின் பராமரிப்பு போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அரசதுறையினதும் தனியார் துறையினதும் பங்களிப்புடன் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் நவீன கொள்கலன் பரிசோதனை முறைமையொன்றை (Container Scanning System) தாபிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.