• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு - 2015 (ஆகஸ்ட் / செப்ரெம்பர் மாத வழங்குகை)
- உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மானிய விலையின் கீழ் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனி (லக் பொஹர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி (கொமர்ஷல் பொஹர) ஆகியவற்றினால் நிறைவேற்றப்படுகின்றன. கேள்வி வழங்குகைக்குரியதாக மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்படாமையைும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2015 ஆகஸ்ட் / செப்ரெம்பர் மாத வழங்குகைக்காக உர விநியோகத்திற்குரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.