• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து நிலைய மொன்றை நிருமாணித்தல்
- இலங்கை அரசாங்கத்தினதும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய அரசாங்கத்தின் "Foundation Supporting a National Trauma Service in SriLanka” அமைப்பினதும் நிதியளிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கருத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் திடீர்விபத்து சேவைகளுக்காக 100 படுக்கை வசதிகளுடன்கூடிய 06 அறுவைசிகிச்சைக் கூடங்களையும் தீவிர சிசிச்சைப் பிரிவுகளையும் கொண்ட மூன்று (03) மாடி திடீர் விபத்து தொகுதியொன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனையிடத்தில் தாபிக்கப்படுவதோடு, இதன் மூலம் போதனா வைத்தியசாலையின் தரம் மேம்படும். இந்த கருத்திட்டத்தின் அவசரநிலைமையை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அதன் நிருமாணிப்பு வேலைகள் தொடர்பிலான ஒப்பந்தத்தை 807 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.