• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்ளக போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் கடந்த சனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கடமைகளல்லாத ஏனைய நோக்கங்களுக்காக உறப்பட்டுள்ள செலவுகள்
- உள்ளக போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் கடந்த சனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உறப்பட்டுள்ள செலவுகள் சம்பந்தமாக பின்வரும் தகவல்கள் உள்ளக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது:

* தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பஸ் உரிமையாளர்கள்/ சாரதிகள் / நடத்துநர்கள் ஆகியோர்களுடன் முன்னாள் சனாதிபதி மேற்கொண்ட சந்திப்பொன்றுக்காக 8.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை.

* அரசியல் கூட்டங்களில் பொது மக்களை கலந்துகொள்ளச் செய்விப்பதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, இதற்காக 50 மில்லியன் ரூபா மாத்திரம் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அறவிடப்படவேண்டியதும் இதுவரை செலுத்தப்படாததுமான 142.5 மில்லியன் ரூபாவை அறிவிட்டுக் கொள்ளும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளருக்குப் பற்றுச்சீட்டுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை குறித்த பற்றுச்சீட்டுக்களை தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

* இலங்கை போக்குவரத்து சபையின் சாலிக்கா மைதானம் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இதற்காக மைதானம் சேதமடைந்துள்ளமை அத்துடன் அண்ணளவாக 50 அடி சுவர் உடைத்து அப்புறப்படுத்தியமையினால் அவற்றை புனரமைக்கும் பொருட்டு கணிசமான செலவினை ஏற்கவேண்டி நேரிட்டுள்ளமை.

மேற்போந் விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், உரிய நிலுவைத்தொகைகளை அறிவிட்டுக் கொள்வதற்கும் செய்துள்ள சேதத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொள்ளும் பொருட்டும் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.