• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுவட்ட வீதிக் கருத்திட்டம் - கெரவலப்பிட்டியவிலிருந்து கடவத்தை வரையிலான வடபிராந்திய பகுதி II இன் சிவில் வேலைகளின் நிருமாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
- சுற்றுவட்ட வீதிக் கருத்திட்டத்தின் ​கெரவலப்பிட்டியாவிலிருந்து கடவத்தை வரையிலான வடபிராந்திய பகுதி II இன் சிவில் வேலைகளின் நிருமாண மேற்பார்வைக்கான ஆலோசனை சேவைகள் வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கான செலவுகளுக்கு நிதியிடும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சார்பில் இலங்கை வங்கிக்கு திறைசேரி உத்தரவாதமொன்றை வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.