• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இளம் சமூகத்தினரின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கையும் மூலோபாயமும்
- கடந்த சில தசாப்பத காலங்களுக்குள் இலங்கையில் இளைய சமூகத்தினரின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, சில சருவதேச சமவாயங்களின் மூலமும் அதேபோன்று உள்நாட்டில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட சட்டங்கள் மூலமும் குழந்தைகளினதும் இளைய சமூகத்தினரதும் சுகாதார நிலையை மேம்படுத்தும் தேவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் மொத்த சனத்தொகையின் சுமார் 25 சதவீதம் இளைய சமூகத்தை பிரதிநித்துவப்படுத்துவதோடு, இந்த வயதெல்லைக்குள் ஏற்படும் சரீர, மனநிலை மாற்றங்களின் மீது சில சந்தர்ப்பங்களில் ஆபத்தான நடவடிக்கைகளின்பால் அவர்களின் கூடிய சார்புநிலையைக் காட்டுகின்றது. இது நாட்டின் பொருளாதார மற்றும் சுகாதார துறைகளின்பால் கடும்பாதிப்பினை ஏற்படுத்துவதோடு, இந்த நிலைமையை தடுப்பதற்காக இளைய சமூகத்தினருக்கு போதுமான ஆலோசனைச் சேவைகள், போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்கள், பாலியல் சுகாதாரம் பற்றிய அறிவை வழங்குதல் போன்ற சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியம்மிக்க இளைய மற்றும் முதிய சமூகமொன்றை நாட்டில் உருவாக்கும் சாத்தியம் உள்ளது. சுகாதாரம் மற்றும் அது சம்பந்தமான ஏனைய கொள்கைகளான தாய் மற்றும் குழந்தை தொடர்பிலான கொள்கை, தேசிய போசாக்குக் கொள்கை, மக்கள்தொகை மற்றும் பாலியல் சுகாதாரக் கொள்கை, தேசிய HIV/AIDS தடுப்புக்கொள்கை, தொற்றுநோயல்லாத நோய்களைத் தடுக்கும் கொள்கை போன்ற கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் நேரடித்தொடர்பினைக் காட்டும் இளம் வயதினரின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கையையும் மூலோபாயத்தையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.