• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்/கட்டான களுதியவளவத்தை காணியிலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளல்
- அண்மைக்காலமாக நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அவ்வாறு வருகைதருவோர்களில் சிலர் அவர்களுக்கு வழங்கியுள்ள விசா காலம் முடிவடைந்த பின்னரும்கூட நாட்டில் தங்கியிருக்கும் நிலைமை காணக்கிடைக்கின்றது. குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள வெளி மாகாணங்களுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வலைதளம் மூலம் அவ்வாறு உரிய காலத்தைவிட கூடுதலாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை குறுகிய காலத்திற்குள் கண்டறிவதற்கான ஆற்றல் கிடைத்துள்ளதோடு, அவர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரைக்கும் தடுத்து வைப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொறுப்பு இந்த திணைக்களத் தினுடையதாகும். இதற்காக வெளிநாட்டவர்களின் குடிவரவு, குடியகல்வு பணிகள் முக்கியமாக நிறைவேற்றப்படுகின்ற கட்டுநாயக்க பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இடமொன்றைப் பயன்படுத்திக் கொள்வது மிகப்பயனுள்ளதாக அமையுமென்பதனால் சுற்றுலா நிலையமொன்றை தாபிப்பதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ள கம்பஹா, கட்டான களுதியவளவத்தை காணியிலிருந்து 100 பேர்ச்சஸ் விஸ்தீரணமுடைய காணித்துண்டை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.