• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2015 - பிரதம அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் கட்சி / வேட்பாளராக அவர்களுடைய மேம்பாட்டின் பொருட்டு உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துதல்
- பிரதம அமைச்சர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள இதற்குச் சமமான ஆட்களினால் 2015 பொதுத் தேர்தலின் போது கட்சி / வேட்பாளராக அவர்களுடைய மேம்பாட்டின் பொருட்டு உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில், அதற்காக உரிய கட்டணங்களை இயைபுள்ள அமைச்சுகளுக்கு செலுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது உடன்பாடு காணப்பட்டது. இதற்கமைவாக, அறவிடப்பட வேண்டிய கட்டணங்கள் சம்பந்தமாக அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படுவது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையாளரினால் செய்யப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பிரதம அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர்கள் உட்பட இதற்கு சமமான பதவியொன்றை வகிக்கும் ஆட்களினால் அவர்கள் தாம் தற்போது வகிக்கும் பதவிக்குரிய சிறப்புரிமையாக அல்லது / முன்னர் வகித்த பதவிக்கு அமைவாக ஏற்புடைத்தாகும் சிறப்புரிமையாக அரசாங்கத்தினாலோ / மாகாண சபையினாலோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது கட்சி / வேட்பாளராக அவர்களுடைய மேம்பாட்டின் பொருட்டு பயன்படுத்து வார்களாயின், அவ்வாறு பயன்படுத்தப்படும் வாகனம் ஒவ்வொன்றுக்கும் 100,000/- ரூபா வீதமான மாதாந்த கண்டனமொன்றைச் செலுத்துதல் வேண்டும்.

* கட்சி / வேட்பாளராக அவர்களுடைய மேம்பாட்டின் பொருட்டு பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருள் செலவுகளை சொந்த பணத்தில் ஏற்றல் வேண்டும்.

* கட்சி / வேட்பாளராக அவர்களுடைய மேம்பாட்டின் பொருட்டு விமானங்களை அல்லது ஹெலிகப்டர்களை பயன்படுத்துவார்களாயின் அதற்கான செலவுகள் அனைத்தும் தனிப்பட்ட வகையில் ஏற்றல் வேண்டும்.

* உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான கட்டணங்கள், அமைச்சுக்கு / மாகாண சபைக்கு / இயைபுள்ள அதிகாரிகளுக்கு செலுத்தவேண்டுமென்பதோடு, விமானங்கள் அல்லது ஹெலிகப்டர்களுக்கான கட்டணங்கள் உரிய நிறுவனங்களுக்கு செலுத்தப்படுதலும் வேண்டும்.