• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை சக்தி நிதியத்தை மறுசீரமைத்தல்
- பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற தேயிலை சக்தி நிதியம் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பேரம்பேசும் சக்தியைப் பலப்படுத்தும் அடிப்படை நோக்கில் 2000 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது. தேயிலைத் தொழிற்சாலை கருத்திட்டம், உரக் கருத்திட்டம், உள்நாட்டு தேயிலை விற்பனை கருத்திட்டம், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலனோம்பல் காப்புறுதிக் கருத்திட்டம் போன்ற நான்கு கருத்திட்டங்கள் இந்த நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போட்டி விலையினை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அவர்களுடைய தேயிலை உற்பத்திகளின் தரத்தினை உயர்த்துவதற்குத் தேவையான இயந்திர சாதனங்கள், வேலை நோக்கங்களை அதிகரிப்பதற்கு போதுமான மூலதனம் வழங்கப்பட முடியுமாயின் தேயிலை தொழிற்சாலைகளை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றலாமென்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தொழிற் சாலைகளின் நவீனமயப்படுத்தல், எதிர்கால தொழிற்படு மூலதனத்தை வழங்குதல் போன்ற தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் நிதியத்தை இலாபமீட்டும் நிலையில் நடாத்திச் செல்லும் பொருட்டு தேவையான மேலதிக நிதி பொதுத் திறைசேரியிடமிருந்து தேயிலை சக்தி நிதியத்திற்கு பெற்றுக் கொள்வதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.