• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகமுபுரவர - மாடிவீடு வீடமைப்புத் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நவீன மயப்படுத்தல் - 2015
- மேற்போந்த கருத்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 80 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி பின்வரும் மூன்று வீடமைப்புக் கருத்திட்டங்களின் நவீன மயப்படுத்தல் வேலைகளைச் செய்வதற்கு கூட்டுஆதன முகாமைத்துவ அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது.

* மொரட்டுவை சமுத்திரசக்தி மாடி வீடமைப்புத் திட்டம்.
* தெஹிவளை ஹில்டா மாடி வீடமைப்புத் திட்டம்.
* அம்பாந்தோட்டை ஆலோக்கபுர மாடி வீடமைப்புத் திட்டம்.

மேற்போந்த மூன்று வீடமைப்புத் திட்டங்களிலும் சுமார் 296 குடும்பங்கள் இதன் மூலம் நன்மை பெறுவர். உத்தேச நவீனமயப்படுத்தல் வேலைகள் குடியிருப்பாளர்கள் இருக்கும் போதே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள மையினாலும் இந்த நவீனமயப்படுத்தல் பணிகளின் விசேட தன்மையைக் கருத்திற் கொண்டும் இந்த பணியினை அரசாங்க நிறுவனமொன்றான அரச அபிவிருத்தி, நிருமாண கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.