• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு 2015 / 2016 ஆம் ஆண்டுக்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கொள்வனவு
- 18 மெகாவோட் கொண்ட நான்கு மின் பிறப்பாக்கிகளையும் 10 மெகாவோட் கொண்ட 8 மின் பிறப்பாக்கிகளையும் கொண்டுள்ள இலங்கை மின்சார சபையின் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் 2015 / 2016 ஆம் ஆண்டுக்கான உராய்வு நீக்கி எண்ணெய் வகைகளின் தேவை 1.1 மில்லியன் லீற்றர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உராய்வு நீக்கி எண்ணெய்களின் அளவினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நாட்டில் தகைமை பெற்ற உராய்வு நீக்கி எண்ணெய் உற்பத்தியாளர்களிடமிருந்து விலை கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உராய்வு நீக்கி எண்ணெய்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.