• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்கிக் கொள்வதற்காக நடைமுறையிலுள்ள திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம்
- 2014 ஆம் ஆண்டாகும் போது இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாக இருந்தது. இலங்கை 2014 ஆம் ஆண்டில் 5,552 மெற்றிக்தொன் மீன் மற்றும் மீன் உற்பத்திகளை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ததோடு, அதன் மூலம் ஈட்டிய வருமானம் 9,103 மில்லியன் ரூபாவாகும். ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2010 ஆம் ஆண்டில் சட்டவிரோத, ஒழுங்குறுத்தப்பட்டாத, அறிக்கையிடப்படாத கடற்றொழில் தொடர்பில் இலங்கை உட்பட, மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சில நாடுகளுக்கு விசேட கட்டளைகளை வழங்கியதோடு, அதன் பின்னர், 2015 சனவரி 15 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வது சம்பந்தமாக தடை விதித்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு செயற்பாட்டு ரீதியிலான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதோடு, அதில் 36 குறியிலக்குகளும் 21 தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளையும் கொண்ட முக்கிய 57 விசேட பணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த 36 குறியிலக்குகளுக்கிடையில் 30 குறியிலக்குகள் இலங்கையினால் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென்பதுவும் மீதி குறியிலக்குகள் அண்மையில் பூர்த்தி செய்யப்படுமென்பதுவும் தீர்க்கப்பட வேண்டிய 21 பிரச்சினைகள் சம்பந்தமாக இதுவரை திருப்தியளிக்கக் கூடிய விதத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதென்பதுவும் இந்த முன்னேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாதாந்தம் அறிக்கையிடப்படுகின்றதென்பதுவும் இந்த செயற்பாட்டு திட்டத்தின் முன்னேற்றம் சம்பந்தமான விரிவான அறிக்கைகள் 2015 மே மாதம் 15 ஆம் யூன் மாதம் 30 ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்குப்பட்டுள்ளதெனவும் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் ஈர்க்கப்பட்டதோடு, இலங்கை இந்தப் பிரச்சினை தொடர்பில் வெற்றிகரமாக செயலாற்றியுள்ளமையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட தடை 2016 ஆம் ஆண்டளவில் நீக்குவதற்கு இயலுமாகுமென்பது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.