• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர்வலய பழங்களுக்கான சருவதேச அமைப்பின் 6 ஆவது மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்
- ”உலர்வலய பழங்களுக்கான சருவதேச அமைப்பு" என்னும் அமைப்பானது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் அனுசரணையின் மீது கட்டியெழுப்பப்பட்ட வலய அபிவிருத்தி வலையமைப்பொன்றாவதோடு, இதில் 13 நாடுகள் உறுப்புரிமை கொண்டுள்ளன. இலங்கையில் பழ வகைகளின் நுகர்வுமட்டம் உலக சுகாதார அமைப்பினால் சிபாரிசு செய்யப்பட்ட மட்டத்தை விட மிகக் குறைந்த பெறுமதியினை கொண்டுள்ளமையினால், பழ மரச் செய்கையின் போது சருவதேச தொழினுட்பங்களை பரிமாறிக் கொள்வதற்காக சருவதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பினை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். இந்த சருவதேச வலையமைப்பின் பிரதான நோக்கங்களாவன மரபணு பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகள், சருவதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வசதிகள், மனிதவள பாதுகாப்பு, போசாக்கு அளவுபற்றி நுகர்வோருக்கு அறிவூட்டுதல் போன்றவையாகும். இந்த அமைப்பின் ஆறாவது மாநாடு 2015 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதியிலிருந்து 06 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.