• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பிராந்தியத்திற்கான உற்பத்திதிறன் அமைப்புடன் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்படும் சருவதேச பயிற்சி செயலமர்வு
- ஆசிய பிராந்தியத்திற்கான உற்பத்திதிறன் அமைப்பு யப்பானை முதன்மையாகக் கொண்டு அதன் உறுப்பு நாடுகளில் தொழினுட்ப, கமத்தொழில் துறைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பொருட்டு, 1961 ஆம் ஆண்டிலிருந்து தாபிக்கப்படவுள்ளது. இலங்கை உட்பட ஆசிய மற்றும் பசுபிக் வலயங்களைச் சேர்ந்த 20 நாடுகள் இந்த சங்கத்தில் உறுப்பாண்மையைப் பெற்றுள்ளன. உறுப்பு நாடொன்றாக இலங்கையும் இதற்குரிய சமவாயங்களில் கைச்சாத்திட்டுள்ளது. 2014 நவம்பர் மாதத்தில் பிலிப்பைன்சில் நடாத்தப்பட்ட ஆசிய பிராந்தியத்திற்கான உற்பத்திதிறன் அமைப்பின் தலைவர்களினது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு "கமத்தொழில் உற்பத்திகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு பெறுமதி சேர்த்தல்" என்னும் தொனிப்பொருளின் கீழ் கமத்தொழில் பயிற்சி செயலமர்வொன்றை 2015 செப்ரெம்பர் 07 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்கும் உபசரணை நாடாக உரிய ஒழுங்கமைப்பு பணிகளை மேற்கொள்வதற்குமாக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.