• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய குருதி மாற்று சேவைகள் சட்டம்
- தேசிய குருதி மாற்று சேவையானது மிக பரந்துபட்ட துறையொன்றாகுமென்பதோடு, உயிரணுக்களின் ஆக்கம், இரத்த தானம், குருதி மாற்றல் இந்த துறையின் கீழ் அபிவிருத்தி அடைந்துவரும் துறைகளாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நிகழ்கால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் தேசிய குருதி மாற்று சேவைகள் சட்டத்தைத் திருத்தும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.