• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுகத்தில் தெப்பமொன்றின் மீது தாபிக்கப்பட்டுள்ள Colombo Power (Pvt.) Ltd., கம்பனிக்குச் சொந்தமான 60 மெகாவோட் ஆற்றலுடைய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மின்சாரத்தை கொள்வனவு செய்தல்
- Colombo Power (Pvt.) Ltd., கம்பனிக்குச் சொந்தமான 60 மெகாவோட் ஆற்றலுடைய மின் உற்பத்தி நிலையம் கொழும்பு துறைமுகத்தின் தெப்பமொன்றின் மீது தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்காக இந்த நிறுவனத்திற்கும் இலங்கை மின்சார சபைக்குமிடையில் நிலவும் உடன்படிக்கை 2015‑06‑30 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. உரிய உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் உரிமையை 571 மில்லியன் யப்பான் யென்களை செலுத்தி (அண்ணளவாக 641 மில்லியன் ரூபா) இலங்கை மின்சார சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.